இந்தியா

கர்நாடகத்தில் பள்ளிப் பேருந்து-டிராக்டர் மோதல்: 4 மாணவர்கள் பலி,  8 பேர் காயம்

கர்நாடகத்தில் பள்ளிப் பேருந்து-டிராக்டர் மோதியதில் மாணவி உள்பட 4 மாணவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

கர்நாடகத்தில் பள்ளிப் பேருந்து-டிராக்டர் மோதியதில் மாணவி உள்பட 4 மாணவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டத்தில் பள்ளி ஆண்டு விழாவை முடிந்து மாணவர்கள் பள்ளிப் பேருந்தில் தங்களது வீடுகளுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

இவர்கள் பயணித்த பேருந்து அழகூர் கிராமம் அருகே இன்று அதிகாலை வந்துகொண்டிருந்தபோது டிராக்டருடன் மோதியது. 

இந்த சம்பவத்தில் மாணவி உள்பட 4 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 8 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

விபத்தில் சிக்கிய மாணவர்கள் அழகூரில் உள்ள வர்த்தமானா கல்வி நிறுவனத்தில் படித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் பசுமை விருது: செப்டம்பா் 2 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை - தன்பாத், போத்தனூா் - பரௌனி இடையே சிறப்பு ரயில்

பெண் கிராம நிா்வாக அலுவலா் மீது தாக்குதல்: ஒருவா் கைது

பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

வீடு புகுந்து நகை திருடிய 3 சிறுவா்கள் கைது

SCROLL FOR NEXT