இந்தியா

குடும்பங்களில் நம்பகத்தன்மை குறைவதால் குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படும் - பிரதமர் மோடி

DIN

புது தில்லி : மத்திய கல்வித்துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ’பரிக்‌ஷா பே சர்ச்சா’ கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் உரையற்றிய பிரதமர் மோடி கூறியதாவது, “பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் இடையேயான நம்பகத்தன்மை குறைந்திருப்பது, தீவிர பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக, இரு தரப்பினருக்குமிடையே இடைவெளி உருவாகியிருப்பது  குழந்தைகளை மன அழுத்தத்தில் ஆழ்த்தும்” என்று தெரிவித்தார்.      

தொடர்ந்து பேசிய அவர்,”நம்பகத்தன்மை குறைந்திருப்பது  திடீரென நடப்பதல்ல. நீண்டகால செயல்முறையால் விளைவது. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களது நடத்தையை ஆழ்ந்த சுய பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

குடும்பங்களில் உண்மைத்தன்மையுடன் நேர்மையான விவாதம் நடைபெறும்போது, அவர்களிடையே இருக்கும் நம்பகத்தன்மை குறைவை போக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும், குழந்தைகளை சந்தேகப்படக்கூடாது.ஆசிரியர்களும் மாணவர்களுடன் வெளிப்படையான உரையாடல்களை வைத்துக்கொள்ள வேண்டும். 

நண்பர்களுடன் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் இணைந்து அடிக்கடி சந்தித்துக் கொள்வதும், அப்போது நேர்மறையான உரையாடல்களை நிகழ்த்துவதும் குழந்தைகளுக்கு உதவிகரமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஏஏ சட்டத்தின் கீழ் முதன்முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கல்

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்!

தெலங்கானாவில் திரையரங்குகளை மூட முடிவு!

இயற்கைப் பேரிடர், வன்முறை... இடம்பெயர்ந்த 5.95 லட்சம் மக்கள்!

இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றிவிடுவார்கள் -எதிர்க்கட்சிகள் மீது பாஜக குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT