இந்தியா

தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு புதிய தலைவர் நியமனம்!

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) தலைவராக முன்னாள் ரயில்வே வாரியத் தலைவர் அனில் குமார் லஹோட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

DIN

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) தலைவராக முன்னாள் ரயில்வே வாரியத் தலைவர் அனில் குமார் லஹோட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

டிராய் அமைப்பின் முன்னாள் தலைவரான பி.டி.வகேலா ஓய்வு பெற்றதையடுத்து, கடந்த 4 மாதங்களாக இப்பொறுப்பு காலியாக இருந்தது. 

இந்நிலையில் ரயில்வே வாரியத்தின் முன்னாள் தலைவரான அனில் குமார் லஹோட்டியை இப்பொறுப்பில் நியமிப்பதற்கு மத்திய அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

மூன்றாண்டுகள் அல்லது 65 வயது வரை அவர் இந்தப் பதவியை வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவரது நியமனத்தை வரவேற்றுள்ள சிஓஏஐ அமைப்பின் செயலர் எஸ்.பி.கோச்சார், “அனில் குமார் லஹோட்டியின் மிக நீண்ட அனுபவம் மற்றும் வழிகாட்டுதலின்படி இந்திய தொலைத்தொடர்பு துறை முன்னேற்றம் காண உள்ளது.” என்று கூறியுள்ளார்.

இவர் 2023 ஜனவரி 1 முதல் 2023 ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை இந்திய ரயில்வே வாரியத்தின் தலைவராகப் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT