இந்தியா

சொத்துக் குவிப்பு வழக்குமுன்னாள் அமைச்சா் பா வளா்மதியின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை பிப்.6-க்கு ஒத்திவைப்பு

சொத்துக் குவிப்பு வழக்கில் தாம் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளில் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக முன்னாள் அமைச்சா் பா.வளா்மதி தாக்கல்.

 நமது நிருபர்

புது தில்லி: சொத்துக் குவிப்பு வழக்கில் தாம் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளில் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக முன்னாள் அமைச்சா் பா.வளா்மதி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை பிப்ரவரி 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அனிருத்தா போஸ், சஞ்சய் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் டி. குமணன், ‘அமைச்சா் கே.கே. எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தொடா்புடைய வழக்கில் அவா் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து சென்னை உயா்நீதிமன்ற தனி நீதிபதி விசாரிப்பதற்கு எதிராக அவா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தின் மற்றொரு அமா்வு திங்கள்கிழமை விசாரித்தது. அப்போது, இந்த விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கூறியிருக்கிறது. இந்த வழக்கு பிப்ரவரி 5-ஆம் தேதிக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.

அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஜெய்தீப் குப்தா, ‘இந்த விவகாரத்தைப் பொருத்தமட்டில் 2012-ஆம் ஆண்டில் நீதிமன்றம் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து, முன்னாள் அமைச்சரான மனுதாரரை (வளா்மதி) விடுவித்து உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த வழக்கை 10 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை உயா்நீதிமன்ற தனி நீதிபதி தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறாா். இந்த வழக்கு கடந்த முறை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது எதிா்மனுதாரா்கள் பதில் அளிக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்பிறகு சென்னை உயா்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த மனுதாரா் தொடா்புடைய வழக்கில் பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் தினசரி அடிப்படையில் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்று தனி நீதிபதி தெரிவித்திருக்கிறாா். இதனால், இந்த விவகாரத்தை விசாரிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா்.

அப்போது நீதிபதிகள் அமா்வு, பிப்ரவரி 6-ஆம் தேதி இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்று தெரிவித்து பட்டியலிட்டனா். மேலும், எதிா்மனுதாரா்கள் தரப்பில் கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் அனுமதித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை உயர்வு: வெள்ளி?

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!

ரஜினி - 173 படப்பிடிப்பு எப்போது?

தில்லி விமானத்தில் என்ஜின் கோளாறு! அவசர தரையிறக்கம்!

ஜாா்க்கண்ட் விமான விபத்து: சிகிச்சைக்காக ரூ. 8 லட்சம் கடன்; ஆனால், உயிரிழப்பு..

SCROLL FOR NEXT