இந்திய கடற்படையால் மீட்கப்பட்ட பாகிஸ்தான், ஈரானியர்கள் 
இந்தியா

சோமாலிய கொள்ளையர்களிடமிருந்து மீட்ட இந்திய கடற்படைக்கு நன்றி!

சோமாலிய கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்ட பாகிஸ்தான், ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்திய கடற்படைக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

DIN


சோமாலிய கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்ட பாகிஸ்தான், ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்திய கடற்படைக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விடியோவை இந்திய கடற்படை பகிர்ந்துள்ளது. 

சோமாலியாவின் கிழக்கு கடலில் சென்றுகொண்டிருந்த ஈரான் நாட்டைச் சேரந்த அல் நயீமி என்ற கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் சிறைபிடித்தனர். அந்த கப்பலில் இருந்த 11 பேரையும் சிறை பிடித்தனர். 

இதேபோன்று கடந்த சனிக்கிழமை இம்மான் என்ற பெயருடைய கப்பலையும் சோமாலியர்கள் சிறைபிடித்தனர். அதிலிருந்த பாகிஸ்தான் மற்றும் ஈரானைச் சேர்ந்த 17 பேரை சோமாலியர்கள் சிறைபிடித்தனர். 

இந்திய கடற்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து சிறைபிடிக்கப்பட்ட கப்பலைக் கைப்பற்றி சிறை பிடிக்கப்பட்டவர்களை விடுவித்தனர்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்றுமுறை சோமாலியர்களால் கைப்பற்றப்பட்ட படகை  மீட்டு அதில் சிறைபிடிக்கப்பட்டிருந்தவர்களை இந்திய கடற்படை மீட்டது. 

இதனிடையே சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து மீட்ட இந்திய கடற்படைக்கு மீட்கப்பட்ட பாகிஸ்தான், ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் நன்றி தெரிவிக்கும் விடியோ வெளியாகியுள்ளது. 

அதில், சோமாலியர்கள் தங்கள் கப்பலை எவ்வாறு சிறைபிடித்தனர் என்பதையும், கடற்படை கப்பலைக் கண்டதும் அவர்கள் நடந்துகொண்ட விதம் பற்றியும் விவரித்துள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT