சாலையில் முதலை. 
இந்தியா

மகாராஷ்டிரம்: சாலையில் உலா வந்த 8 அடி நீள முதலையால் வாகன ஓட்டிகள் அச்சம்

DIN

மகாராஷ்டிரத்தில் சாலையில் உலா வந்த 8 அடி நீள முதலையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

மகாராஷ்டிர மாநிலம், ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சிப்லுன் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள ஆறுகளின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.

ரத்னகிரி மாவட்டத்தில் ஜூலை 2ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கனமழை காரணமாக சிப்லுன் சாலையில் 8 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று உலா வந்தது.

அதனை காரில் இருந்தபடி வாகன ஓட்டி ஒருவர் விடியோர் எடுத்துள்ளார். இந்த விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. பல முதலைகள் இருக்கும் அருகில் உள்ள சிவா நதியில் இருந்து வெளியே வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மூட்டம் (சிறுகதைகள்)

சிவாஜியும் கண்ணதாசனும்

திரையெல்லாம் செண்பகப்பூ

கடியலூர் உருத்திரங்கண்ணனாரின் பட்டினப்பாலை (ஆய்வுரை)

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

SCROLL FOR NEXT