முகப்பு
இந்தியா

சிபிஐ கைது செய்ததை எதிர்த்து கேஜரிவால் மனு தாக்கல்!

சிபிஐயின் கைதைக் கண்டித்து கேஜரிவால் மனு...

Updated On : 1 ஜூலை, 2024 at 12:32 PM
அரவிந்த் கேஜரிவால் - கோப்புப் படம்
பகிர்:

கலால் கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ கைது செய்ததை எதிர்த்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டு, ஜூன் 2-ம் தேதி மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

அமலாக்க இயக்குநரகம் தாக்கல் செய்த பணமோசடி வழக்கில் நீதிமன்றக் காவலில் இருந்த கேஜரிவாலை ஜூன் 26ஆம் தேதி திகார் சிறையில் இருந்து சிபிஐயால் கைது செய்யப்படு, மூன்று நாள் காவலில் வைக்கப்பட்டார்.

Advertisement

ஜூலை 29 அன்று சிபிஐ தரப்பில், கேஜரிவால் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. இதையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், அவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் விசாரிக்க சிபிஐ தரப்பில் அனுமதி கோரப்பட்டது.

சிபிஐ தரப்பு மனு மீதான விசாரணையில் உத்தரவு பிறப்பிக்காமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், அதைத் தொடர்ந்து கேஜரிவாலை 14 நாள் நீதிமன்றக் காவலில் விசாரிக்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு ஜூலை 12 வரை நீதிமன்றக் காவல் வழங்கி தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐயின் கைதை எதிர்த்து கேஜரிவால் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.