முகப்பு
இந்தியா

நீட் விவகாரத்தில் நிரந்தரத் தீர்வு காண வேண்டும்: மாயாவதி

நீட் தேர்வின் நிச்சயமற்ற தன்மையால் மக்கள் அமைதியை இழந்துள்ளனர்.

Updated On : 1 ஜூலை, 2024 at 11:46 AM
மாயாவதி (கோப்புப்படம்)
பகிர்:
Updated On : 1 ஜூலை, 2024 at 11:28 AM

நீட் மருத்துவ நுழைவுத் தேர்வின் நிச்சயமற்ற நிலை மக்களிடையே அமைதியின்மை, பதட்டம், கோபத்தை ஏற்படுத்துவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறினார்.

தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு சமீபத்தில் நடந்து முடிந்தது. தேர்வில் எண்ணற்ற முறைகேடுகளும், குளறுபடிகளும் நிகழ்ந்துள்ளது வெட்டவெளிச்சமாகியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் சிலரைக் கைதும் செய்துள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள மருத்துவ மாணவர்கள் பல்வேறு பிரச்னைகளை எழுப்பி வருவதோடு, எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Advertisement

குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜூன் 23ஆம் தேதி திட்டமிடப்பட்ட முதுகலை நீட் தேர்வையும் சுகாதார அமைச்சகம் ஒத்திவைத்தது.

இதுதொடர்பாக மாயாவதி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

நீட் தேர்வில் நிச்சயமற்ற தன்மையால் மக்கள் அமைதியை இழந்துள்ளனர். நாட்டில் அவ்வப்போது நடைபெறும் பல்வேறு தேர்வுகளின் புனிதத்தன்மையுடன், தற்போது நிலவும் நிச்சயமற்ற தன்மை, குறிப்பாக நீட் இளங்கலை மற்றும் முதுகலை தேர்வுகளால் மக்களிடையே அமைதியின்மை, பதட்டம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு விரைவான மற்றும் நிரந்தரத் தீர்வைக் கண்டறிவது மிகவும் முக்கியமானது.

அகில இந்திய அளவில் மட்டுமின்றி உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறும் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் அரசு ஆள்சேர்ப்பு விவகாரங்களிலும் ஊழல் நடந்துள்ளது வருத்தம் ஏற்படுத்துவதோடு கவலையையும் அளிக்கிறது.

முறைகேடுகளைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் இந்த பிரச்னைகளில் எந்தவித அரசியல் அலட்சியமோ, ஆதாயமோ இருக்கக்கூடாது என்று ஹிந்தியில் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.