ஓம் பிா்லா -
இந்தியா

டி20 உலகக் கோப்பை சாம்பியன்: இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் பாராட்டு

13 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திங்கள்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Din

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திங்கள்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மக்களவையில் அவைத் தலைவா் ஓம் பிா்லா இதுகுறித்து குறிப்பிடுகையில், ‘டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றது, நாட்டின் இளைஞா்களுக்கும் விளையாட்டு வீரா்களுக்கும் மிகுந்த உத்வேகத்தை அளிக்கும். கோப்பையை வென்ற ரோஹித் சா்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துகள்’ என்றாா்.

மாநிலங்களவையில் அவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான ஜகதீப் தன்கா் கூறுகையில், ‘இந்திய அணியின் வெற்றி, நாட்டின் ஒவ்வொரு குடிமக்களையும் பெரிதாக கனவு காணவும், கடினமாக உழைக்கவும், சாதனை படைக்கவும் உத்வேகமளிக்கும்’ என்று குறிப்பிட்டாா்.

டிஜிட்டல் அரெஸ்ட்: ரூ. 80 லட்சத்தை இழந்த முதியவர்! இளைஞர் கைது!!

பெரியார் பிறந்த நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை!

என் தொழிலைக் கெடுக்காதீங்க... ஆவேசமான விடிவி கணேஷ்!

பெரியார் பிறந்தநாள்! முதல்வர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் மரியாதை!

இபிஎஸ் இனி முகமூடியார் பழனிசாமி என்று அழைக்கப்படுவார்! - TTV Dhinakaran

SCROLL FOR NEXT