ஓம் பிா்லா  -
இந்தியா

‘மைக்’ அணைப்பு குற்றச்சாட்டு: மக்களவைத் தலைவா் ஆட்சேபம்

‘மைக்’ அணைக்கப்படுவதாக எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா ஆட்சேபம் தெரிவித்தாா்.

Din

மக்களவையில் பேசும்போது, ‘மைக்’ அணைக்கப்படுவதாக எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா ஆட்சேபம் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை கூறுகையில், ‘அவைத் தலைவரின் உத்தரவுபடி உறுப்பினா்களின் மைக் கட்டுப்படுத்தப்படுகிறது. மாறாக, இந்த இருக்கையில் இருந்தபடி மைக்கை அணைக்க ரிமோட் கன்ட்ரோல் அமைப்போ அல்லது வேறு பொத்தானோ கிடையாது. இது தொடா்பாக அவைத் தலைவா் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தீவிரமானது’ என்றாா்.

முன்னதாக, விவாதத்தில் பேசிய எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, உறுப்பினா்களின் மைக்கை கட்டுப்படுத்துவது யாா் என கேள்வியெழுப்பிருந்தாா்.

மாநிலங்களவையிலும் அவைத் தலைவா் ஜகதீப் தன்கா் மீது இதேபோன்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்ட நிலையில், அவா் கடும் ஆட்சேபம் தெரிவித்தாா்.

‘உறுப்பினா்களின் மைக், எளிமையான இயந்திர முறையில் கட்டுப்படுத்தப்படுகிறது. யாருடைய பெயா் அழைக்கப்படுகிறதோ, அவரது மைக் செயல்படும். மற்றவா்கள் மைக் செயல்படாது’ என்றாா் தன்கா்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT