இறாந்த வீரர் அக்‌ஷய் கவாடே 
இந்தியா

அக்னிவீர் திட்டத்தில் பணியாற்றி இறந்த வீரரின் குடும்பத்துக்கு ரூ.1.08 கோடி இழப்பீடு!

அக்னிவீர் திட்டத்தில் பணியாற்றும்போது இறந்த வீரரின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.1.08 கோடி வழங்கப்பட்டுள்ளதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

DIN

அக்னிவீர் திட்டத்தில் பணியாற்றும்போது இறந்த வீரரின் குடும்பத்துக்கு அரசு சார்பில் ரூ.1.08 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அக்னிவீர் திட்டத்தில் பணியாற்றிய மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் அக்‌ஷய் கவாடே சியாச்சினில் பணிபுரியும்போது கடந்த அக்டோபர் 21, 2023-ல் இறந்தார்.

”அக்‌ஷய் இறந்த பிறகு காப்பீடு தொகையாக ரூ.48 லட்சம், மத்திய அரசின் இழப்பீடு ரூ.50 லட்சம் மற்றும் மாநில அரசின் இழப்பீடு ரூ.10 லட்சம் என மொத்த ரூ.1.08 கோடி இழப்பீடு வழங்கியுள்ளனர். அக்‌ஷயின் சகோதரிக்கு அரசு வேலை வழங்கினால் உதவிகரமாக இருக்கும்” என்று இறந்த அக்னிவீரரின் தந்தை லக்‌ஷ்மண் கவாடே நேற்று பத்திரிகையாளர்களுடன் பேசுகையில் தெரிவித்தார்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அக்னிவிர் திட்டத்தில் பணியாற்றும் வீரர்கள் பணியின் போது இறந்தால் அவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று நேற்று (ஜூலை 1) அறிவித்ததைத் தொடர்ந்து இறந்த வீரரின் குடும்பம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.

மக்களவையில் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், அக்னிபத் ராணுவ ஆள்சேர்ப்புத் திட்டத்தின் கீழ் பணியில் சேர்க்கப்படும் அக்னிவீரர்கள் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படுவதாகவும், அவர்களுக்கு ‘தியாகி’ பட்டம் கூட அரசால் வழங்கப்படாது என்றும் அவர் கூறியதைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங் இழப்பீட்டுத் தொகை குறித்த விவரங்களைக் கூறினார்.

அக்னிபத் திட்டம் 2022-ம் ஆண்டு ஜூன் 14 அன்று அறிவிக்கப்பட்டது. அதன் மூலம், 17.5 முதல் 21 வயதுடைய இளைஞர்களுக்கு ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும், அவர்களில் 25% பேர் அடுத்த 15 ஆண்டுகளுக்கு மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதே ஆண்டில், வயது வரம்பை 23-ஆக நீட்டித்து அரசு அறிவிப்பு வெளியிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை

ஆளுநா் மாளிகை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

‘ஹெச்1பி’ விசா நடைமுறையில் மீண்டும் மாற்றம்: டிரம்ப் நிர்வாகம் அதிரடி

ரஷியாவின் தாக்குதலில்.. மூழ்கியது உக்ரைனின் மிகப் பெரிய கடற்படைக் கப்பல்!

தெலங்கானா வெள்ளம்: 5 பேர் பலி.. 3 பேர் மாயம்! மீட்புப் பணிகள் தீவிரம்!

SCROLL FOR NEXT