குவாஹாட்டியில் பிரம்மபுத்திரா நதியில் அபாய அளவைத் தாண்டி பாயும் தண்ணீா் படம் | ஏஎன்ஐ
இந்தியா

அஸ்ஸாம்: கனமழை, வெள்ளத்தால் 6 லட்சம் மக்கள் பாதிப்பு!

பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை நதிகளில் அபாய அளவைத் தாண்டி தண்ணீா் பாய்ந்து வருகிறது.

DIN

அஸ்ஸாம் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் சுமார் 6 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாநிலத்தின் முக்கிய நதியான பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை நதிகளில் அபாய அளவைத் தாண்டி தண்ணீா் பாய்ந்து வருகிறது.

அருணாசல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையைத் தொடா்ந்து அண்டை மாநிலமான அஸ்ஸாமில் வெள்ள நிலவரம் அபாய கட்டத்தை எட்டியுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 19 மாவட்டங்களில் 6.44 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ள பாதிப்புகளால் 35 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தால் கடுமையான சேதத்தை சந்தித்துள்ள லகிம்பூர் மாவட்டத்தில் மட்டும் 1.43 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அஸ்ஸாம் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 1275 கிராமங்கள் பாதிப்பை சந்தித்துள்ளன. சுமார் 26,199.18 ஹெக்டேர் விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 4.85 கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்காக 136 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 54,000க்கும் அதிகமானோர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஸிரங்கா தேசியப் பூங்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மொத்தமுள்ள 233 வன முகாம்களில் 95 வன முகாம்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.இதையடுத்து காட்டு யனைகள் உள்ளிட்ட விலங்குகள் சாலைகள் வழியாக இடம்பெயர்ந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசிய பிரதமர் மோடி, அம்மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் தேவரகொண்டா-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை - புகைப்படங்கள்

அமைச்சர் பதவி வேண்டாம்: வருமானம் குறைந்துவிட்டது; சினிமாவில் நடிக்கப் போகிறேன்! - சுரேஷ் கோபி

பிகார் தேர்தல்: பாஜக 101, ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளில் போட்டி!

உலகக் கோப்பை: ஸ்மிருதி, பிரதீகா அசத்தல்; ஆஸி.க்கு 331 ரன்கள் இலக்கு!

இந்த வராம் கலாரசிகன் - 12-10-2025

SCROLL FOR NEXT