ஜுனாகத்: குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால், ஜுனாகத் மாவட்டத்தின் 30 கிராமங்கள், நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், ஜுனாகத் மாவட்டத்தின் வந்தாளி கிராமத்தில் 361 மி.மீ. மழை பதிவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.
சௌராஷ்டிரம் மற்றும் தெற்கு பகுதிகளில் ஏராளமான தாலுகாக்களில் கடந்த 24 மணி நேரத்தில் 200 மி.மீ. மழை பதிவாகியிருக்கிறது. இதனால், அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் மீட்புப் படையினர், அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். பல இடங்களில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகள் மூழ்கிவிட்டன. இதனால், நாட்டின் பிற பகுதிகளிலிருந்து ஏராளமான கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
அதுபோல, ஜுனாகத் மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட 30 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.