-
இந்தியா

ஹாத்ரஸில் உயிரிழந்தோருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்: உ.பி. முதல்வர்

ஹாத்ரஸில் ஆன்மிகச் சொற்பொழிவில் பாதிப்படைந்தோருக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் நிவாரணத் தொகை அறிவிப்பு

DIN

ஹாத்ரஸில் ஆன்மிகச் சொற்பொழிவில் பாதிப்படைந்தோருக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில், போலே பாபா தலைமையிலான ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது. இந்த சொற்பொழிவில் பங்கேற்ற மக்கள், திரும்பி வெளியே செல்ல முற்பட்டபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

இதனால், கூட்டத்தில் சென்ற சிலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டும், கூட்டநெரிசலில் சிக்கி காயமடைந்தும் உயிரிழந்துள்ளனர். இதுவரையில் கிடைத்த தகவல்களின்படி, 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 நிவாரணத்தொகையாக அறிவித்துள்ளார்.

மேலும், இந்த சம்பவத்திற்கான காரணங்கள் குறித்து விசாரிக்க கூடுதல் காவல்துறை குழுவையும் நியமித்துள்ளார்.

இருப்பினும் உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மடகாஸ்கர் மண்டை ஓடுகளும் மறக்க முடியாத அம்பிகி வெறியாட்டமும்!

பற்றி எரியும் இந்தோனேசியா... நாடாளுமன்றக் கட்டடத்துக்கு தீ வைப்பு! 3 பேர் பலி!

உ.பி.: மது அருந்திய 2 பேர் பலி, ஒருவர் கவலைக்கிடம்!

அதீத வெப்பம்: தாமதமாக நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள்!

மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: மும்பையில் போலீஸாரின் விடுமுறைகள் ரத்து

SCROLL FOR NEXT