இடிந்து விழுந்திருக்கும் பாலம் - கோப்புப்படம் 
இந்தியா

பிகார் மாநிலத்தில் அடுத்த பாலம் விழுந்தது! 15 நாள்களில் 10வது!!

பிகார் மாநிலத்தில் மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்துள்ள சம்பவம் வெளியாகியிருக்கிறது. 15 நாள்களில் 10வது சம்பவம் இது.

DIN

பிகார் மாநிலத்தில் வியாழக்கிழமை மற்றொரு பாலம் இடிந்து விழுந்துள்ளது. இது கடந்த 15 நாள்களில் பிகாரில் இடிந்து விழுந்த 10வது பாலம் என்று அறியப்படுகிறது.

கடைசியாக நடந்த சம்பவம் சரண் மாவட்டத்தில் நேரிட்டுள்ளது. அதன்படி, பார்த்தால், சரண் மாவட்டத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன.

உள்ளூர் நிர்வாகத்தால் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பாலம் இடிந்து விழுந்ததில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலில் புதன்கிழமையன்று நான்கு பாலங்கள் இடிந்து விபந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், மூன்று பாலங்கள் இடிந்து விழுந்த விவரம் மட்டுமே வெளியாகியிருந்தது. இந்த நிலையில்தான் நான்காவது பாலம் சரண் மாவட்டத்தில் இடிந்து விழுந்த விவரம் கிடைக்கப்பெற்றுள்ளது.

நேற்று விழுந்த நான்கு பாலங்களில் ஒன்று 1982-83ஆம் ஆண்டிலும், மற்றொன்று 1998ஆம் ஆண்டிலும் கட்டப்பட்டதாகும்

கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழை காரணமாகவே பாலங்கள் பலமிழந்து விழுந்திருக்கலாம் என்று கூறப்பட்டாலும், பாலங்களை குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை சீரமைக்கும் பணிகளை பிகார் அரசு மேற்கொண்டிருக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

பிகாரில் கடந்த சில ஆண்டுகளாகவே, பாலங்கள் இடிந்து விழும் நிகழ்வு தொடா்கதையாகியுள்ளது. தரமற்ற கட்டுமானம், பராமரிப்பின்மை போன்ற காரணங்களால் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுவதாக அந்த மாநில பொதுப் பணித் துறை மீது மக்கள் குற்றம்சாட்டி வந்துள்ளனர்.

அவை மெய்தான் என்பதை நிரூபிக்கும் வகையில், பிகாரில் கடந்த 15 நாள்கள் 10 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. கடும் அதிர்ச்சி என்னவென்றால், நேற்று புதன்கிழமை ஒரே நாளில் 4 இடங்களில் பாலங்கள் விழுந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ. 13 லட்சம் டெபாசிட்? விரைவில் அறிவிப்பு வருகிறது!!

மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவதுதான் ராகுலின் வேலை: பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT