ரிஷி சுனக் | கியெர் ஸ்டார்மர் | மோடி  
இந்தியா

ரிஷி சுனக், கியெர் ஸ்டார்மருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

பிரிட்டனின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், புதிய பிரதமர் கியெர் ஸ்டார்மருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

DIN

பிரிட்டனின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கியெர் ஸ்டார்மருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி, இங்கிலாந்து முன்னாள் ரிஷி சுனக்கை வாழ்த்தி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இங்கிலாந்தில் போற்றத்தக்க உங்களின் தலைமைப் பண்பிற்கும், இந்தியா - இங்கிலாந்து இடையேயான உறவை மேம்படுத்த நீங்கள் அழித்த பங்களிப்பிற்கும் நன்றி. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிரிட்டனின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ள தொழிலாளர் கட்சித் தலைவர் ஸ்டார்மரை குறித்து மோடி வெளியிட்ட பதிவில், “பிரிட்டன் பொதுத் தேர்தலில் போற்றத்தக்க வெற்றிபெற்ற கியெர் ஸ்டார்மருக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். பரஸ்பர மற்றும் செழிப்பை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து துறைகளிலும் இந்தியா - இங்கிலாந்து இடையேயான உறவை வலுப்படுத்த நேர்மறையான ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை எதிர்நோக்கியுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சவரனுக்கு ரூ.800 குறைந்த தங்கம் விலை!

திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன்!

ஜல்லிக்கட்டு வா்ணனையாளா்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரிக்கை

10, 12 வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு! முழு விவரம்!

எனது தலைமையிலான அமர்வு விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை! தலைமை நீதிபதி

SCROLL FOR NEXT