ஆம் ஆத்மியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக சஞ்சய் சிங் நியமனம்
சஞ்சய் சிங்கிற்கு புதிய பொறுப்பு: ஆம் ஆத்மி நாடாளுமன்றக் குழு தலைவர்
ஆம் ஆத்மியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக சஞ்சய் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பொறுப்பை நான் மிகுந்த அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுவேன்.
அரவிந்த் கேஜரிவாலுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலங்களவை எம்.பி.யாக கடந்த மார்ச் மாதம் பதவியேற்ற சஞ்சய் சிங்கிற்கு தற்போது கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி, 10 எம்.பி.க்களுடன் மாநிலங்களவையில் நான்காவது பெரிய கட்சியாக உள்ளது. மேலும் மக்களவையில் அக்கட்சிக்கு மூன்று எம்.பி.க்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.