இந்தியா

நண்டுகளால் மாயமான சிறுவர்கள்!

காணாமல்போன சிறுவர்களைக் காப்பாற்றிய தீயணைப்புத் துறை

DIN

மகாராஷ்டிரத்தில் 5 சிறுவர்கள் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியது.

மகாராஷ்டிரத்தின் ஆசாத் நகரைச் சேர்ந்த சுமார் 12 வயதுடைய 5 சிறுவர்கள் நேற்று (ஜூலை 05) மாலையில் நண்டுகளைப் பிடிப்பதற்காக மும்ப்ரா என்ற மலைப்பகுதிக்குச் சென்றுள்ளனர். ஆனால், நண்டு பிடிக்கச் சென்ற சிறுவர்கள் வழிதவறி, திரும்பி வெளியில் வரமுடியாத பகுதிக்கு சென்று மாட்டிள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சிறுவர்கள் உதவிக்காக கூச்சலிட்டுள்ளனர். அந்த வழியே சென்ற ஒருவர், சிறுவர்களின் சத்தத்தைக் கேட்டு, தேடியுள்ளார். ஆனால், அவரால் கண்டுபிடிக்க இயலவில்லை.

இதனையடுத்து சிறுவர்களைக் காப்பாற்றுவதற்காக, அவர் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தடைந்து சிறுவர்களைத் தேடியுள்ளனர்.

இறுதியாக அதிகாலை 3 மணியளவில் சிறுவர்களைத் தீயணைப்புத் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். பின்னர், சிறுவர்களை அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆசியக் கோப்பை மோதல்: சூர்யா, பும்ராவுக்கு அபராதம்! ரௌஃப் 2 போட்டிகளில் விளையாட தடை!

2-ஆம் கட்ட SIR பணிகள்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

மிடில் கிளாஸ் டீசர்!

SCROLL FOR NEXT