கனமழை: அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்!
பனிலிங்கத்தை தரிசிக்க தற்காலிகமாக தடை விதித்துள்ளது...
இந்தியாகனமழை: அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்!
பனிலிங்கத்தை தரிசிக்க தற்காலிகமாக தடை விதித்துள்ளது...
கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று(ஜூலை 6) அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
வருடாந்திர அமர்நாத் யாத்திரை கடந்த ஜூன் 28-ல் தொடங்கியது. பனிலிங்கத்தை தரிசிக்க பல மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து வருகின்றனர்.
இந்த நிலையில், அமர்நாத் குகைக் கோயிலுக்குச் செல்லும் பால்டால், பஹல்காம் ஆகிய இரு வழிகளிலும் கனமழை பெய்துவருவதையடுத்து, இன்று காலை முதல் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
3,800 மீட்டர் உயரமுள்ள குகைக் கோயிலுக்குச் சென்று இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர்கள் தரிசித்துள்ளனர். கடந்த ஆண்டு 5 லட்சம் பக்தர்கள் குகைக் கோயிலை தரிசித்தனர்.
இந்தாண்டுக்கான யாத்திரை ஆகஸ்ட் 19-ம் தேதியோடு நிறைவடைகின்றது. அமர்நாத் யாத்திரைக்கு பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.