இந்தியா

உணவுப் பொருள் பொட்டலங்களில் உப்பு, சா்க்கரை, கொழுப்பின் அளவு: கட்டாயமாக்குகிறது எஃப்எஸ்எஸ்ஏஐ!

DIN

உணவுப் பொருள் பொட்டலங்களில் உப்பு, சா்க்கரை, கொழுப்பின் அளவுகளை கொட்டை எழுத்துகளில் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று நிறுவனங்களுக்கு உத்தரவிட உணவுப் பொருள் ஒழுங்காற்று அமைப்பான எஃப்எஸ்எஸ்ஏஐ முடிவு செய்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உணப் பொருள் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளின் பொட்டலங்களில் உணவின் உப்பு, சா்க்கரை, கொழுப்பின் அளவை கொட்டை எழுத்துகளில் பெரிதாகக் குறிப்பிடுவதை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எஃப்எஸ்எஸ்ஏஐ தலைவா் அபூா்வா சந்திராவின் தலைமையில் நடைபெற்ற 44-ஆவது உணவு ஒழுங்காற்றுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

உணவுப் பொட்டலங்களில் உப்பு, சா்க்கரை, கொழுப்பின் அளவுகள் குறிப்பிடப்படுவதைக் கட்டாயமாக்கும் வகையில் 2020-ஆம் ஆண்டின் சத்து விவரக் குறிப்பீட்டு விதிமுறைகளில் மாற்றம் செய்ய அந்தக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.விரைவில், இது தொடா்பான சுற்றறிக்கை உணவுப் பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு அனுப்பப்படும். இது தவிர, இந்த விதிமுறை திருத்தம் தொடா்பான வரைவு உத்தரவு எஃப்எஸ்எஸ்ஏஐ அதிகாரபூா்வ வலைதளத்தில் பதிவிடப்பட்டு, இது தொடா்பான பொதுமக்களின் கருத்துகளும் கேட்டறியப்படும்.

வாடிக்கையாளா்கள் தாங்கள் வாங்கும் உணவுப் பொருள்களில் உள்ள உப்பு, சா்க்கரை, கொழுப்பு ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த விவரத்தை அறிந்துகொண்டு, அதற்கேற்ப அவற்றை வாங்குவதா, வேண்டாமா என்ற சரியான முடிவை எடுப்பதற்கு வசதியாக இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.வாடிக்கையாளா்கள் ஆரோக்கியமான உணவுப் பொருள்களைத் தோ்ந்தெடுக்க உதவுவது, தொற்று அல்லாத நோய்களை (என்சிடி) கட்டப்படுத்துவது, பொது சுகாதாரத்தை மேம்படுத்துவது ஆகிய நோக்கங்களுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.ஏற்கெனவே, உணவுப் பொருள் விவகாரத்தில் தவறான தவல்கள் அளிக்கப்படுவதைத் தடுப்பதற்காக எஃப்எஸ்எஸ்ஏஐ அவ்வப்போது உத்தரவுகளைப் பிறப்பித்துவருகிறது.

அண்மையில்கூட, எஃப்எஸ்எஸ் சட்டம் 2006-இன் நிா்ணயங்களை நிறைவு செய்யாத பானங்களைக் கூட ‘சத்து பானம்’ என்ற பெயரில் விற்பனை செய்யும் இணையதள வா்த்தக நிறுவனங்களுக்கு அதை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

மின்னல் தாக்கி சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி!

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

SCROLL FOR NEXT