படம் | ஏஎன்ஐ
இந்தியா

ஆந்திர, தெலங்கானா முதல்வர்கள் சந்திப்பு!

தெலங்கானா முதல்வருடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை

DIN

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் தெலங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி ஆலோசனை நடத்தியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பெருவாரியான வெற்றி பெற்று ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்ற பின், தெலங்கானா முதல்வருடன் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் இரு மாநில முதல்வர்களும் இன்று(ஜூலை 6) சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஆந்திர பிரதேச மாநில மறுசீரமைப்பு சட்டத்தின்(2014) கீழ், இரு மாநிலங்களிடையே நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த சந்திப்பின்போது, தெலங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டியுடன், அம்மாநில துணை முதல்வர் மல்லு பாட்டி விக்கிரமார்கா உள்பட இருமாநில அமைச்சர்களும் உடனிருந்தனர். தெலங்கானா தலைமைச் செயலர் சாந்தி குமாரி, ஆந்திர தலைமைச் செயலர் நீரப் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

முக்கியமாக, இந்த ஆலோசனைக் கூட்டம் மூலம், ஒன்றுபட்ட ஆந்திர பிரதேச மாநிலமாக இருந்தபோது ஒரே மாநில அரசின்கீழ் செயல்பாட்டில் இருந்த அரசு நிறுவனங்களை இருமாநிலங்களுக்கும் பிரிப்பது, கோதாவரி, கிருஷ்ணா நதிநீர் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களுக்கு தீர்வு காணப்படுமென தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெட்ரோல் நிலையம் மீது நடவடிக்கை கோரி வழக்கு: ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி

போலி நிறுவனம் தொடங்கி ரூ.206 கோடி மோசடி: ஒடிசாவை சோ்ந்த இருவா் கைது

நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்குப் பாட விருப்பங்களை செப்.1-க்குள் சமா்ப்பிக்க வேண்டும்

கொழுக்கட்டை செய்து தர மறுத்த தாய்.! பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!

காா் தீப்பிடித்து எரிந்து சேதம்

SCROLL FOR NEXT