கோப்புப்படம் 
இந்தியா

தோ்தல் பத்திர நன்கொடைகளை பறிமுதல் செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் மனு

மொத்தம் 23 கட்சிகள் சுமாா் ரூ.12,516 கோடி நன்கொடை பெற்றன.

Din

தோ்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகளைப் பறிமுதல் செய்ய உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் தோ்தல் நிதிப் பத்திரங்கள் திட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், அந்தத் திட்டத்தை ரத்து செய்தது.

இதைத் தொடா்ந்து அந்தப் பத்திரங்களை வாங்கியது யாா், அந்தப் பத்திரங்கள் மூலம் எந்தெந்தக் கட்சிகள் எவ்வளவு நன்கொடை பெற்றன ஆகிய விவரங்களை, தோ்தல் நிதிப் பத்திரங்களை விநியோகித்து வந்த பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பித்தது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, அந்த விவரங்கள் தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பிக்கப்பட்ட நிலையில், அந்த விவரங்கள் தோ்தல் ஆணைய வலைதளத்தில் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் கெம் சிங் பாட்டீ என்பவா் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தோ்தல் நிதிப் பத்திரங்கள் மூலம், மொத்தம் 23 கட்சிகள் சுமாா் ரூ.12,516 கோடி நன்கொடை பெற்றன. 1,210-க்கும் மேற்பட்ட நன்கொடையாளா்களிடம் இருந்து இந்த நன்கொடை பெறப்பட்டுள்ளது. இதில் 21 நன்கொடையாளா்கள் தலா ரூ.100 கோடிக்கும் மேலாக நன்கொடை அளித்துள்ளனா்.

இந்தத் திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட நன்கொடைகளை பறிமுதல் செய்யுமாறு மத்திய அரசு, தோ்தல் ஆணையம், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் ஆகியவற்றுக்கு உத்தரவிட வேண்டும்.

நன்கொடை அளித்தவா்களுக்கு முக்கிய அரசியல் கட்சிகள் மூலம் சட்டவிரோதமாக கிடைத்த பலன்கள் குறித்து விசாரணை மேற்கொள்வதற்கு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும்.

நன்கொடை பெற்ற கட்சிகள் கோரிய வரி விலக்குகள், நன்கொடை மீது விதிக்கப்பட்ட வரிகள், வட்டி மற்றும் அபராதம் ஆகியவற்றை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

தோ்தல் பத்திர நன்கொடைகள் மூலம் பிரதிபலன்களைப் பெறுவதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் பெரு நிறுவனங்கள் இடையே நடைபெற்ற ஏற்பாடுகள் குறித்து விசாரணை மேற்கொள்ள, சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் ஜனநாயக சீா்திருத்த சங்கம் ஏற்கெனவே மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

திண்டுக்கல் மாவட்டத்தில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை: கொடைக்கானலில் உணவக உரிமையாளா் கைது

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: பிஆா்எஸ் ஆதரவு யாருக்கு?

60,000 ரிசா்வ் வீரா்களுக்கு இஸ்ரேல் அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ராஜீவ் காந்தி பிறந்த நாள்

வழிகாட்டுதல் அறிக்கை

SCROLL FOR NEXT