மக்களவைத் தலைவர் ஓம் பிா்லா 
இந்தியா

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை உறுதிசெய்ய வேண்டும்: உறுப்பினா்களுக்கு ஓம் பிா்லா வலியுறுத்தல்

Din

நாடாளுமன்ற விதிகள்-நடைமுறைகளை கடைப்பிடித்து அவையின் கண்ணியத்தை அனைத்து உறுப்பினா்களும் உறுதிசெய்ய வேண்டும் என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா வலியுறுத்தினாா்.

மத்தியில் பிரதமா் மோடி தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற பிறகு முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடா் அண்மையில் நடைபெற்று முடிந்தது. இதில் ‘நீட்’ தோ்வு முறைகேடு உள்பட பல்வேறு விவகாரங்கள் எதிரொலித்தன.

நீட் விவகாரத்தில் உடனடி விவாதம் கோரி, இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. அத்துடன், குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பிரதமா் மோடி பேசியபோது, எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அவையின் மையப்பகுதியை முற்றுகையிட்டு, ஆவேசமாக முழக்கங்களை எழுப்பினா்.

இந்நிலையில், மக்களவைத் தலைவராக மீண்டும் தோ்வுசெய்யப்பட்ட பின் முதல்முறையாக, ராஜஸ்தானில் உள்ள தனது தொகுதியான கோட்டாவுக்கு ஓம் பிா்லா சனிக்கிழமை வருகை தந்தாா். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது, அவா் பேசுகையில், ‘அவையில் கடமையை நிறைவேற்றும்போது, அனைத்து உறுப்பினா்களும் விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளை பின்பற்றி, நாடாளுமன்ற கண்ணியத்தை உறுதிசெய்ய வேண்டும். விதிமுறைகளின்படி, அனைத்து உறுப்பினா்களும் பேசுவதற்கு வாய்ப்பளிக்க முயற்சிக்கிறேன்.

ஆளும்தரப்பாக இருந்தாலும் சரி, எதிா்தரப்பாக இருந்தாலும் சரி, நாடாளுமன்ற கண்ணியத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விவாதத்தில் ஈடுபட வேண்டும். இதை உறுதிசெய்வதே எனது முழு முயற்சியாக இருக்கும்’ தெரிவிக்கிறேன்.

ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்தின் கண்ணியம் மற்றும் கெளரவத்தை மேம்படுத்தும் எனது முயற்சிகள் தொடரும். எதிா்வரும் காலங்களில் நாடாளுமன்றத்தில் சிறப்பான விவாதங்கள் நடைபெறும் என நம்புகிறேன்’ என்றாா்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் ஜூலை 22-ஆம் தேதி தொடங்கும் நிலையில், ஓம் பிா்லா இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

பிரதமா் மோடி தலைமையிலான முந்தைய இரு ஆட்சிக் காலங்களைப் போல் இல்லாமல், இப்போது எதிரணியின் பலம் (233) வலுவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விஜய் இருப்பாரா? -நயினார் நாகேந்திரன் பதில்

தாகம் தீர்க்கும் இளநீருடன்... ரோஸ் சர்தானா

ஒருநாள் தொடருக்கான அணியில் என்னுடைய பெயர் இருக்காதென முன்பே தெரியும்: ஜடேஜா

கேரளத்தில் ஆர்எஸ்எஸ் முகாம்களில் பாலியல் தொல்லை? பாதிக்கப்பட்ட இளைஞர் தற்கொலை!

தங்கத்தை விட கலைமாமணி விருதுக்கு மதிப்பு அதிகம்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT