பஞ்சாபில் பொதுத்துறை வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.25 லட்சம் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம், பக்வாரா-பலாஹி சாலையில் பொதுத்துறை வங்கியின் ஏடிஎம் இயந்திரம் அமைந்துள்ளது.
சனிக்கிழமை அதிகாலை வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை கேஸ் கட்டரைப் பயன்படுத்தி உடைத்த கொள்ளையர்கள், ரூ.25 லட்சம் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
மேலும் கேஸ் கட்டரின் வெப்பத்தால் ஏடிஎம்மில் இருந்த சில ரூபாய் நோட்டுகளும் எரிந்து நாசமாயின.
பகவாரா காவல் கண்காணிப்பாளர் ரூபிந்தர் கௌர் பாட்டி கூறுகையில், கொள்ளையர்களை கண்டுபிடிக்க அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார்.
பஞ்சாபில் பொதுத்துறை வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.25 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.