முகப்பு
இந்தியா

‘மசோதாக்கள் நிறைவேற்றத்தில் அவசரம் கூடாது’

இந்தியா

‘மசோதாக்கள் நிறைவேற்றத்தில் அவசரம் கூடாது’

Updated On : 6 ஜூலை, 2024 at 6:49 PM
பகிர்:

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரில் மசோதாக்கள் அவசரகதியில் நிறைவேற்றப்பட கூடாது என்று மத்திய அரசை திரிணமூல் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் மூத்த எம்.பி. டெரிக் ஓ பிரையன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த வேண்டியது மத்திய அரசின் கடமை. மசோதாக்கள் நிறைவேற்றத்தில் அவசரம் கூடாது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்கக் கோரி எதிா்க்கட்சிகள் அளிக்கும் நோட்டீஸ்கள் ஏற்கப்பட வேண்டும். மக்களவை துணைத் தலைவா் பதவியை ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளருக்கு அளிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →