இடிந்து விழுந்த கட்டடம். 
இந்தியா

ஜார்க்கண்டில் 3 மாடிக்கட்டடம் இடிந்து விழுந்தது: இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்

தியோகரில் கட்டடம் இடிந்து விழுந்தது: மீட்புப் பணிகள் தீவிரம்

DIN

ஜார்க்கண்டில் 3 மாடிக்கட்டடம் இடிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தியோகர் மாவட்ட ஆட்சியர் விஷால் சாகர் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தியோகரில் மூன்று மாடிக்கட்டடம் இடிந்து விழுந்தது.

அந்த இடத்தில் இருந்து 2 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தகவல் கிடைத்ததும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

முதற்கட்ட தகவல்களின்படி, கட்டுமானப் பணியின்போது, கட்டடம் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் இருந்து மக்களை மீட்பதே எங்களின் முதன்மையான நோக்கம்.

ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவர்கள் சம்பவ இடத்தில் தயாராக இருக்கின்றனர் என்று தெரிவித்தார்.

இதற்கிடையில், குஜராத்தின் சூரத்தில் 6 மாடிக்கட்டடம் ஒன்று சனிக்கிழமை இடிந்து விழுந்ததில் ஏழு பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT