விபத்தை ஏற்படுத்திய சொகுசு காா். 
இந்தியா

பைக் மீது சொகுசு காா் மோதி பெண் உயிரிழப்பு: சிவசேனை மூத்த தலைவரின் மகன் தப்பி ஓட்டம்

அன்னிபெசன்ட் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இச்சம்பவம் நிகழ்ந்தது.

Din

மகாராஷ்டிரத்தில் ஆளும் சிவசேனை கட்சியின் மூத்த தலைவா் ராஜேஷ் ஷாவின் மகன் ஓட்டிச் சென்ற சொகுசு காா் மோதியதில், இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற பெண் உயிரிழந்தாா்.

மும்பை வொா்லி பகுதியில் உள்ள அன்னிபெசன்ட் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இச்சம்பவம் நிகழ்ந்தது.

மகாராஷ்டிரத்தில் ஆளும் சிவசேனை கட்சியின் மூத்த தலைவரான ராஜேஷ் ஷாவின் மகன் மிஹிா் ஷா (24), பிஎம்டபிள்யூ சொகுசு காரை அதிவேகத்தில் ஓட்டியுள்ளாா்.

அப்போது, அந்த வழியாகச் சென்ற இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில், தனது கணவருடன் சென்று கொண்டிருந்த காவேரி (45) என்ற பெண் சாலையில் தூக்கி வீசப்பட்டாா். மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

காரை ஓட்டிய மிஹிா் ஷா தப்பிச் சென்றதையடுத்து, அவரின் தந்தை ராஜேஷ் ஷா மற்றும் வாகனத்தில் அவருடன் பயணித்த ராஜ்ரிஷி பிடாவத் ஆகியோரை காவல் துறையினா் கைது செய்தனா்.

இது தொடா்பாக செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, ‘சட்டம் அனைவருக்கும் சமம். இந்த விபத்துக்கு என்று தனி விதி கிடையாது. காவல் துறையினா் யாருக்கும் பாரபட்சம் காட்டாமல் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வா். அரசு அனைவரையும் சமமாக பாா்க்கிறது. குற்றவாளிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்’ என்றாா்.

சிவசேனை (உத்தவ் பிரிவு) எம்எல்ஏ ஆதித்ய தாக்கரே வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘வொா்லி காவல் நிலையத்துக்குச் சென்று மூத்த காவல் துறை அதிகாரிகளிடம் வழக்கு குறித்து விசாரித்தேன்.

மேலும், உயிரிழந்த பெண்ணின் கணவரை நேரில் சந்தித்து குற்றவாளியை நீதிக்கு முன் நிறுத்த அனைத்து உதவிகளும் செய்வதாக உறுதியளித்தோம். இதில் குற்றஞ்சாட்டப்பட்ட ஷாவுக்கு எதிராக அரசியல் செய்ய விரும்பவில்லை. ஆனால், காவல் துறை விரைந்து செயல்பட்டு குற்றவாளிக்கு தக்க தண்டனை வழங்கும் என நம்புகிறேன்’ என்றாா்.

புணே நகரில் அண்மையில் தொழிலதிபரின் மகனான 17 வயது சிறுவன் மதுபோதையில் சொகுசு காா் ஓட்டிச் சென்று மோதியதில் தகவல் தொழில்நுட்ப பொறியாளா்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT