மும்பையில் ரயில் சேவை தற்காலிக நிறுத்தம்!
கனமழையால் மும்பை ரயில் போக்குவரத்து பாதிப்பு
கனமழையால் மும்பை ரயில் போக்குவரத்துச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மும்பையில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கே மரங்களும் நிலச்சரிவும் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கல்யாண் மற்றும் கசாரா இடையேயான பரபரப்பான ரயில் பாதையில் மரங்கள் விழுந்துள்ளதால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கசாரா மற்றும் டிட்வாலா இடையேயான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் மத்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
மத்திய ரயில்வேயின் புறநகர் சேவையை தினமும் சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்துகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.