மும்பை: பாதாள சாக்கடையில் விழுந்த ஒருவர் பலி; 4 அதிகாரிகள் இடைநீக்கம்
மும்பையில் பாதாள சாக்கடையில் விழுந்த ஒருவர் பலியானது பற்றி...
மும்பையில் வியாழக்கிழமை (ஜூலை 2) பாதாள சாக்கடையில் விழுந்த ஒருவர் பலியானார்.
மும்பையின் மேற்கு புறநகர்ப் பகுதியான சாந்திவலி பகுதியில் இன்று பெய்த கனமழையின் போது, திறந்திருந்த பாதாள சாக்கடைக்குள் விழுந்ததில் அஸ்லாம் இஷாக் ஷேக் (55) என்ற நபர் பலியானார்.
இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
Advertisement
Advertisement
பலியான அஸ்லாம் இஷாக் ஷேக் ஒரு டெம்போவைக் கடந்து நடந்து சென்று திடீரென மறைந்து போவது தெரிந்தது. உடனடியாக அங்குள்ள சிலர் பாதாள சாக்கடைக்குள் எட்டிப் பார்ப்பதும் அதில் பதிவாகியிருந்தது.
தகவலறிந்த மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவரைத் தேடுவதற்காகப் பணியாளர்கள் கழிவுநீர் சாக்கடைக்குள் ஏணியை இறக்கியபோது, அவரது குடையையும் செருப்புகளையும் மட்டுமே கண்டனர்.
நீரின் ஓட்டம் அதிகமாக இருந்ததால், அவர் எந்தத் திசையில் அடித்துச் செல்லப்பட்டார் என்பதைத் தொடக்கத்தில் கண்டறிய முடியவில்லை. பின்னர் விழுந்த இடத்திலிருந்து சற்றுத் தொலைவில் அவர் கண்டறியப்பட்டார்.
அதன்பின், அருகிலிருந்த மாநகராட்சி மருத்துவமனைக்கு அவர் அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதை உறுதி செய்தனர் என்று தெரிவித்தனர்.
நான்கு மாநகராட்சி அதிகாரிகளை இடைநீக்கம் செய்து, உயர் நிலை விசாரணைக் குழுவை அமைத்துள்ளதாக அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டனர்.
A man died after falling into a manhole in Mumbai on Thursday (July 2).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.