போராட்டத்தில் அத்துமீறிய போலீஸ்காரர்! தப்பாக இல்லை என்கிறது காவல்துறை!
சிஜேபி போராட்டத்தில் பெண்ணிடம் போலீஸ்காரர்அத்துமீறியது குறித்து...
மும்பையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை போலீஸ்காரர் ஒருவர் அத்துமீறி தொட்ட விவகாரத்துக்கு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடு தழுவிய போராட்டத்துக்கு மத்தியில் மும்பையிலும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், மும்பையின் சிவாஜி பூங்கா அருகே வியாழக்கிழமை (ஜூலை 23) நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டோரை காவல்துறையினர் கலைக்க முயன்றனர்.
Advertisement
Advertisement
போராட்டக்காரர்களை கலைக்கும் நடவடிக்கையில் பெண்களிடம் காவல்துறையினர் அத்துமீறி நடந்ததாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இதுதொடர்பாக விடியோக்களும் சமூக ஊடகங்களில் வைரலாகின.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரை போலீஸ்காரர் ஒருவர் அத்துமீறி தொடுவதுபோல விடியோ வெளியான நிலையில் அதற்கு பல்வேறு தரப்பிடமிருந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து, பெண்களிடம் அத்துமீறிய காவல் அதிகாரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
இதனையடுத்து, பெண்களிடம் அத்துமீறி நடந்ததாகக் கூறப்படும் விடியோ குறித்து, துணை காவல் ஆணையர் அக்பர் பதான் கூறியதாவது, விடியோவில் வரும் போலீஸ் அதிகாரி, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஓர் ஆணைத்தான் பிடிக்க முயன்றார். ஆனால், அவர் விலகிச் சென்ற நேரத்தில் பெண் ஒருவர் உள்ளே சிக்கிக் கொண்டார். விடியோவை உன்னிப்பாக கவனித்து, அனைத்து உண்மைகளைச் சரிபார்த்துத்தான் மூத்த அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதில் அத்துமீறல் என எதுவுமில்லை என்று தெரிவித்தார்.
பெண்களிடம் அத்துமீறியதாகக் கூறப்படும் காவல் அதிகாரி, ஓட்டுநராகப் பணிபுரியும் காவலர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
CJP protest in Mumbai: Cop inappropriately touches woman protester, police defends
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.