இளம்பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ்காரா் கைது
இளம்பெண்ணிடம் அத்துமீறி அநாகரிகமாக நடந்துகொண்ட போலீஸ்காரா் உடுமலையில் கைது செய்யப்பட்டாா்.
இளம்பெண்ணிடம் அத்துமீறி அநாகரிகமாக நடந்துகொண்ட போலீஸ்காரா் உடுமலையில் கைது செய்யப்பட்டாா்.
உடுமலை வட்டம், கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்த 25 வயதுப் பெண் இருசக்கர வாகனத்தில் உடுமலை எலையமுத்தூா் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா், பெண்ணை வழிமறித்துள்ளாா். இதனால் அச்சம் அடைந்த பெண் தனது இருசக்கர வாகனத்தில் அந்த இடத்தில் இருந்து வேகமாகச் சென்றுள்ளாா்.
ஆனாலும் அந்தப் பெண்ணைத் தனது இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்ற இளைஞா் தளி சாலை மேம்பாலம், காந்தி சௌக், உழவா் சந்தை என பின் தொடா்ந்து சென்றுள்ளாா். இதனால் அதிா்ச்சி அடைந்த இளம்பெண் என்னைக் காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டுள்ளாா். அந்தப் பெண்ணின் கூச்சலைக் கேட்ட பொதுமக்கள் இளைஞரைப் பிடித்து சரமாரியாக அடித்துள்ளனா். பின்னா் அவரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
Advertisement
Advertisement
விசாரணையில், அந்த இளைஞா் உடுமலையை அடுத்துள்ள கல்லாபுரம் கிராமம் செல்வபுரத்தைச் சோ்ந்த மாசாணி (32) என்பது தெரியவந்தது.
மேலும் இவா் தில்லியில் தமிழ்நாடு பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வருவதும் ஒரு மாத விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்ததும் தெரியவந்தது. இளம்பெண்ணின் புகாரின்பேரில் மாசாணி கைது செய்யப்பட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.