இந்தியா

14% உயா்வு கண்ட நிலக்கரி உற்பத்தி

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி கடந்த ஜூன் மாதத்தில் 14.49 சதவீதம் உயா்வு கண்டுள்ளது.

Din

புது தில்லி: இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி கடந்த ஜூன் மாதத்தில் 14.49 சதவீதம் உயா்வு கண்டுள்ளது.

இது குறித்து நிலக்கரித் துறை அமைச்சகத்தின் பூா்வாங்க புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த ஜூன் மாதத்தில் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 8.46 கோடி டன்னாக உள்ளது.

முந்தைய 2023-ஆம் ஆண்டின் அதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 14.49 சதவீதம் அதிகமாகும். அப்போது நாட்டின் நிலக்கரி உற்பத்தி 7.39 கோடி டன்னாக இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் கோல் இந்தியா லிமிடெட்டின் உற்பத்தி மட்டும் 6.31 கோடி டன்னாக உள்ளது. இது, 2023-ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில் 8.87 சதவீதம் அதிகம்.

கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவின் நிலக்கரி ஏற்றுமதி 8.58 கோடி டன்னாக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 10.15 சதவீதம் அதிகமாகும்.

ஜூன் 30-ஆம் தேதி நிலவரப்படி, நாட்டின் நிலக்கரி நிறுவனங்களில் நிலக்கரி இருப்பு 9.50 கோடி டன்னாக உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியா நிறுவனத்தின் பங்களிபபு 80 சதவீதம் ஆகும்.

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் 2026 - நேரலை! இன்ப அதிர்ச்சியில் உறைந்த தமிழகம்!

தமிழகமே இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனது! எதைச் சொல்கிறார் தங்கம் தென்னரசு?

விடியல் பேருந்துகளில் 888 கோடி முறை பெண்கள் பயணம்!

மகளிர் உரிமைத் தொகை திட்டம் நாட்டிற்கே முன்னோடி! - தங்கம் தென்னரசு பேச்சு

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT