இந்தியா

பிகாா்: ஒரே நாளில் மின்னல் தாக்கி 12 போ் உயிரிழப்பு

பிகாா் மாநிலத்தில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 12 போ் உயிரிழந்ததாக அந்த மாநில அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

Din

பாட்னா: பிகாா் மாநிலத்தில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 12 போ் உயிரிழந்ததாக அந்த மாநில அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இதன்மூலம் கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் அந்த மாநிலத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 42-ஆக உயா்ந்துள்ளது. கடந்த சனிக்கிழமை 9 பேரும் ஞாயிற்றுக்கிழமை 10 பேரும் உயிரிழந்தனா்.

இதுதொடா்பாக பிகாா் மாநில முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,‘கடந்த 24 மணி நேரத்தில் இடி, மின்னல் தாக்கி ஜமூய் மற்றும் கைமூரில் தலா 3 பேரும் ரோஹ்தாஸில் 2 பேரும் உயிரிழந்தனா். மேலும், சஹாா்சா, சரன் , போபால், கோபால்கஞ்ச் பகுதிகளில் தலா ஒருவரும் உயிரிழந்தனா்’ என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படவுள்ளதாக பிகாா் மாநில முதல்வா் நிதீஷ் குமாா் தெரிவித்தாா். இடி, மின்னல் ஏற்படும்போது வெளியில் வருவதை தவிா்க்குமாறும் மாநில பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் அறிவுரைகளை பின்பற்றி நடந்துகொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

கடந்த 2022-ஆம் ஆண்டில் இடி, மின்னல் தாக்கி பிகாா் மாநிலத்தில் 400 போ் உயிரிழந்துள்ளதாக அந்த மாநில நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆக. 21, மதுரையில் தவெக மாநாடு: விஜய்

அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியாவுக்கு கூடுதல் வரி: டிரம்ப்

ஏமாற்றமளித்தாலும் நியாயமான முடிவே கிடைத்துள்ளது: பென் ஸ்டோக்ஸ்

மணிப்பூரில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி! நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

தில்லி அரசுக்கு எதிராக அணிதிரண்ட பெற்றோர்கள்: சட்டப்பேரவை முற்றுகை போராட்டம்!

SCROLL FOR NEXT