படம் | ஏஎன்ஐ
இந்தியா

ஹாத்ரஸ் துயரம்: 6 அதிகாரிகள் பணி இடைநீக்கம்

ஹாத்ரஸ் துயரம்: 6 அதிகாரிகள் பணி இடைநீக்கம்

DIN

உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டம், புல்ராய் கிராமத்தில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் கடந்த 2-ஆம் தேதி நடைபெற்ற ஆன்மிக குரு ‘போலே பாபா’வின் சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 போ் உயிரிழந்தனா்.

இந்த நிலையில், ஹாத்ரஸில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 போ் உயிரிழந்த சம்பவத்தில் சிறப்பு விசாரணைக் குழு உத்தரபிரதேச மாநில அரசிடம் விசாரணை அறிக்கையை இன்று(ஜூலை 9) சமர்ப்பித்துள்ளது. விசாரணை அறிக்கையின்படி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் செய்த தவறே கூட்ட நெரிசல் ஏற்பட முக்கிய காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 2 லட்சம் பேர் திரண்டிருந்த நிகழ்ச்சிக்கு, 80,000 பேர் மட்டுமே பங்கேற்கப் போவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனுமதி பெற்றிருந்ததும், அதற்கான அனுமதியை அதிகாரிகள் வழங்கியிருப்பதும் இந்த விபத்துக்கான முக்கிய காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, இந்த துயரத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது உத்தர பிரதேச அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கோட்டாட்சியர் சிக்கந்தர் ராவ், வட்டாட்சியர் உள்பட 6 அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சாமியார் போலே பாபா என்றழைக்கப்படும் நாராயண் சகார் ஹரி(சூரஜ் பால்) மீது இருநபர் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழு குற்றச்சாட்டுகளை எழுப்பவில்லை என்பது கவனிக்கத்தக்க அம்சமாய் விசாரணை அறிக்கையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் தேவ்பிரகாஷ் மதுகர் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை தொடருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செப்டம்பர் மாதப் பலன்கள் - மீனம்

செப்டம்பர் மாதப் பலன்கள் - கும்பம்

வலுவான ஜிடிபி தரவுகளால் சென்செக்ஸ், நிஃப்டி உயர்ந்து நிறைவு!

செப்டம்பர் மாதப் பலன்கள் - மகரம்

போருக்குப் பிறகு காஸாவைக் கைப்பற்றுகிறதா அமெரிக்கா?

SCROLL FOR NEXT