இந்தியா

ரூ. 20 கோடியில் 4 கவச கார்கள்! வெளிநாட்டுத் தலைவர்களுக்காக வாங்கிய மத்திய அரசு

4 கார்களும் மும்பை துறைமுகம் வந்துவிட்டதாக அதிகாரிகள் தகவல்.

இணையதளச் செய்திப் பிரிவு

வெளிநாட்டுத் தலைவர்கள் இந்தியா வரும்போது பயணிப்பதற்காக மெர்சிடிஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ. 20 கோடி மதிப்பில் 4 கார்களை மத்திய அரசு வாங்கியுள்ளது.

இந்த கார்களை பிற நாடுகளில் இருந்து அதிபர்கள், பிரதமர்கள் இந்தியா வருகையில் பயன்படுத்துவதற்காக பிரத்யேகமாக வாங்கியுள்ளது வெளியுறவுத் துறை அமைச்சகம்.

வெளிநாட்டுத் தலைவர்களின் இந்திய பயணத்தின் போது உயர் ரக கவச வாகனங்களை தனியார் நிறுவனத்திடம் இருந்து வாடகைக்கு வாங்குவது அவ்வளவு பாதுகாப்பாக இருக்காது என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மெர்சிடிஸ் கவச கார்களை மத்திய அரசு வாங்கியுள்ளதாகவும் 4 கார்களும் ஏற்கெனவே மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகத்துக்கு வந்து சேர்ந்ததாகவும் வெளியுறவுத் துறை அதிகாரிகள் தகவல்கள் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு உயர் பாதுகாப்பு அம்சங்களை கொண்ட இந்த காரை தனிநபர் வாங்கினால் இறக்குமதி வரி, சுங்க வரி உள்பட ரூ. 10 கோடிக்கு மேல் செலவாகும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கோரிக்கையை ஏற்று வரிகளை மத்திய அரசு தள்ளுபடி செய்ய ஒப்புதல் வழங்கியதால் ரூ. 20 கோடியிலேயே 4 கார்களை மத்திய அரசு இறக்குமதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நியூசிலாந்தின் 40 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேக்கப் டஃபி!

தருமபுரி அருகே சாலை விபத்து : இரு இளைஞர்கள் பலி!!

“வாக்காளர்களை மீண்டும் சேர்க்க வலியுறுத்தல்!” துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கைவிடப்பட்ட சிவகார்த்திகேயன் - சிபி சக்ரவர்த்தி திரைப்படம்?

இங்கு ரீ-டேக் இல்லை! அஜித் குமார் ரேசிங் ஆவணப்பட டிரைலர்!

SCROLL FOR NEXT