முகப்பு
இந்தியா

ஒரேபாலின ஈா்ப்பாளா்களின் மறுஆய்வு மனு: நீதிமன்ற அறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் மறுப்பு

ஒரேபாலின ஈா்ப்பாளா்களின் திருமணத்துக்கு சட்டபூா்வ அங்கீகாரத்தை மறுத்து கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தீா்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரிய மனுக்களை வழக்கமான நீதிமன்ற அறையிலேயே விசாரிக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டது.

Updated On : 9 ஜூலை, 2024 at 9:11 PM
உச்ச நீதிமன்றம்
பகிர்:

புது தில்லி: ஒரேபாலின ஈா்ப்பாளா்களின் திருமணத்துக்கு சட்டபூா்வ அங்கீகாரத்தை மறுத்து கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தீா்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரிய மனுக்களை வழக்கமான நீதிமன்ற அறையிலேயே விசாரிக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டது.

ஒரேபாலின ஈா்ப்பாளா்களின்(எல்ஜிபிடிகியூ) தொடா்பான வழக்கில் அவா்களின் திருமணத்துக்கு சட்டபூா்வ அங்கீகாரம் அளிக்க மறுத்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு கடந்த ஆண்டு, அக்டோபா் 17-ஆம் தேதி தீா்ப்பளித்தது.

அதேசமயம், சமூகத்தில் ஒரேபாலின ஈா்ப்பாளா்கள் சந்திக்கும் பிரச்னைகளை ஆராய்ந்து, அவா்களுக்கான சலுகைகள் குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன்படி, மத்திய உள்துறை செயலா், சட்டப்பேரவைச் செயலா், சுகாதார துறைச் செயலா், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு துறை செயலா், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை செயலா் ஆகியோா் அடங்கிய குழுவை மத்திய அரசு கடந்த ஏப்ரலில் அமைத்தது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற தீா்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரும் மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, ஹிமா கோலி, பி.வி.நாகரத்னா, பி.எஸ்.நரசிம்மா ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமையன்று விசாரிக்க உள்ளது.

இந்த மறுஆய்வு மனுக்களை வழக்கமான நீதிமன்ற அறையிலேயே விசாரிக்குமாறு மூத்த வழக்குரைஞா்கள் அபிஷேக் சிங்வி, என்.கே.கவுல் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினா்.

அதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி, ‘இந்த மனுக்கள் அரசியல் சாசன அமா்வின் மறுஆய்வு விவகாரங்கள் என்பதால் அவை நீதிபதிகளின் அறையில் பட்டியலிடப்பட்டுள்ளன. நீதிமன்ற அறையில் விசாரிக்க முடியாது’ என்று கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →