கோப்புப் படம் 
இந்தியா

கதுவாவைத் தொடர்ந்து உத்தம்பூர் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உத்தம்பூர் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உத்தம்பூர் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சாங் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த இந்த தாக்குதலுக்கு பாதுகாப்புப் படை வீரர்கள் பதிலடி கொடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜம்மு - காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள், வீரமரணம் அடைந்தனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்புப் படையினர் தரப்பிலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்புப் படை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தி வந்தபோது, இன்றும் பயங்கரவாதிகள் மறைந்திருந்து, பாதுகாப்புப் படையினர் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் சிலர் படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக சுதாரித்துக்கொண்ட வீரர்கள், பயங்கரவாதிகள் மறைந்திருந்த இடத்தை நோக்கி சுமார் 2 மணிநேரம் தொடர்ந்து துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இதில் பயங்கரவாதிகள் ஆயுதங்களை விட்டு தப்பிச்சென்றனர்.

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரின் உத்தம்பூர் மாவட்டத்திலும் இன்று இரவு 8 மணியளவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். உத்தம்பூர் பகுதியிலிருந்து 164 கிலோ மீட்டர் தூரத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சாங் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இத்தாக்குதல் நடந்தது.

பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளதாகவும், அங்கு பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்து வருவதாகவும் அதிகார்கள் தெரிவித்தனர்.

கடந்த ஒரு மாதத்தில் ஜம்மு-காஷ்மீரில் நடத்தப்பட்ட ஆறாவது பயங்கரவாத தாக்குதல் இதுவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் 7 போ் விடுதலை: யாா் வேண்டுமானாலும் மேல்முறையீடு செய்ய முடியாது - மும்பை உயா்நீதிமன்றம்

ஜி.கே.மணி குற்றச்சாட்டுக்கு அன்புமணி தரப்பு பதில்

20 ஆண்டு பணிக்காலத்துக்குப் பின் விருப்ப ஓய்வு: மத்திய அரசு ஊழியா்களுக்கு விகிதாசார அடிப்படையில் ஊதியம்

சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் இருவரை நிரந்தர நீதிபதிகளாக்க பரிந்துரை

ராமசாமி படையாட்சியாரின் பங்களிப்பை போற்றுவோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT