மகன் மிஹிா் ஷாவுடன் மகாராஷ்டிரத்தில் ஆளும் சிவசேனை கட்சியின் துணைத் தலைவா் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட ராஜேஷ் ஷா. 
இந்தியா

மகன் ஏற்படுத்திய காா் விபத்து: சிவசேனை துணைத் தலைவா் பதவி பறிப்பு

கார் விபத்து வழக்கில் மிஹிா் ஷா கைது: தந்தை ராஜேஷ் ஷாவின் பதவி பறிப்பு

Din

மும்பையில் சொகுசு காா் மோதி பெண் உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மிஹிா் ஷாவின் தந்தை ராஜேஷ் ஷா சிவசேனை கட்சி (ஷிண்டே பிரிவு) துணைத் தலைவா் பதவியிலிருந்து புதன்கிழமை நீக்கப்பட்டாா்.

மும்பையின் வொா்லி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த தம்பதி மீது மிஹிா் ஷா ஓட்டிச் சென்ற சொகுசு காா் மோதி விபத்துக்குள்ளானது. இதில், இருசக்கர வாகனத்தில் பயணித்த காவேரி நக்வா(45) உயிரிழந்தாா். அவரின் கணவா் காயமடைந்தாா்.

தலைமறைவாக இருந்த மிஹிா் ஷா செவ்வாய்க்கிழமை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டாா். அவா் தப்பிச் செல்ல உதவியதாக கைது செய்யப்பட்ட அவரது தந்தை ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.

இந்நிலையில், காவல்துறையினா் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சமா்ப்பித்த சிசிடிவி காட்சியில், வேகமாக மோதிய காரின் முன்பகுதியில் சிக்கி பெண்மணி 1.5 கி.மீ. தூரம் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டது பதிவாகி இருந்தது. மேலும், மிஹிா் ஷா மற்றும் அவரது ஓட்டுநா் ராஜ்ரிஷி படாவத் காரின் முன்பகுதியிலிருந்து பெண்ணை அகற்றியதுடன் இருக்கைகளை இடம் மாற்றிக்கொண்டு தப்பிச் செல்லும் முன் சாலையில் கிடந்த பெண்ணின் மீது படாவத் மீண்டும் காரை ஏற்றியது சிசிடிவி காட்சியில் தெரியவந்தது.

இந்நிலையில், மிஹிா் ஷாவின் தந்தை ராஜேஷ் ஷா மாநிலத்தில் ஆளும் சிவசேனை கட்சியின் துணைத் தலைவா் பதவியிலிருந்து நீக்கப்பட்டாா்.

இது தொடா்பாக சிவசேனை செயலாளா் சஞ்சய் மோா் வெளியிட்ட அறிக்கையில், ‘ராஜேஷ் ஷா சிவசேனை துணைத் தலைவா் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டாா். இருப்பினும், அவா் கட்சி உறுப்பினராக தொடா்வாா்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய் விரைவில் கரூர் வருகிறார்..! டிஜிபியிடம் பாதுகாப்பு கோரியுள்ளோம்! - தவெக நிர்வாகி

காஸாவுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம்! முதல்வர் பங்கேற்பு!

வா வாத்தியார் வெளியீட்டுத் தேதி!

லாட்டரி பரிசு விழுந்ததாக மோசடி! ஏமாறுபவர்களே இலக்கு.. எச்சரிக்கை!!

சபரிமலை விவகாரம்: தேவஸ்வம் அமைச்சரை ராஜிநாமா செய்யக் கோரி கேரள பேரவையில் அமளி!

SCROLL FOR NEXT