ராஜஸ்தானில் கச்சா எண்ணெய் திருடிய 3 பேர் கைது!
ராஜஸ்தானில் கச்சா எண்ணெய் திருடிய மூன்று பேர் கைது!
ஜெய்ப்பூர்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் நிலத்தடி முத்ரா - பானிபட் குழாயில் துளையிட்டு கச்சா எண்ணெய் திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை ராஜஸ்தான் காவல்துறையின் கைது செய்தனர்.
பீவாரில் உள்ள ஐ.ஓ.சி.எல் மூத்த பராமரிப்பு மேலாளர் ஷேர் சிங் சவுகான் அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சோஹன்ராம் மற்றும் ஆகாஷ் ஜெயின் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும் இந்த திருட்டு தொடர்பாக ஜோத்பூரைச் சேர்ந்த விஷ்னோய், மோர்பியில் பூபேந்திர சிங் என்கிற ராஜு, குஜராத்தின் வதோதராவைச் சேர்ந்த பகவான் சிங் (32) ஆகியோரை சிறப்பு குழுவினர் கைது செய்ததாக தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement
திருடப்பட்ட கச்சா எண்ணெயை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட ஒரு ஜீப் மற்றும் ஒரு காரும் மீட்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.