FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தை மிகப்பெரிய பொருளாதார சக்தியாக மாற்றுவதே இலக்கு: மோடி

மகாராஷ்டிரத்தை உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக மாற்றுவதே குறிக்கோள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

Updated On : 13 ஜூலை 2024, 9:48 pm IST
மும்பையில் நலத்திட்ட உதவிகளைத் தொடக்கி வைப்பதற்கு முன்பு நரேந்திர மோடிக்கு நினைவுப்பரிசு வழங்கும் ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னவீஸ், அஜித் பவார் - பிடிஐ
பகிர்:

மகாராஷ்டிரத்தை உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக மாற்றுவதே குறிக்கோள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ரூ. 29 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 13) தொடக்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, வளர்ந்த இந்தியாவை கட்டியெழுப்புவதில் மகாராஷ்டிரம் பெரும் பங்கு வகிக்கிறது. தொழில்துறை, விவசாயம், நிதித் துறையிலும் மகாராஷ்டிரம் வலிமையாக உள்ளது.

Advertisement

Advertisement

நாட்டின் நிதி நகரான மும்பையை உலகின் மிகப்பெரிய பொருளாதார மையமாக மாற்ற இவை உதவும். வளர்ந்த இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக மகாராஷ்டிரத்தை மாற்றுவதே குறிக்கோள்.

சிறிய மற்றும் பெரிய முதலீட்டார்கள் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியை வரவேற்றுள்ளனர். உறுதியான நிலைத்தன்மையை பாஜகவால் மட்டுமே வழங்க முடியும் என மக்கள் நம்புகின்றனர். மூன்றாவது முறை ஆட்சியில் மூன்று மடங்கு வேகமாக உழைப்போம் என பதவியேற்கும்போது கூறினேன். அது நடப்பதை இப்போது கண்கூட பார்க்கிறோம்.

தற்போது தொடக்கிவைக்கப்பட்டுள்ள நலத்திட்டங்கள் மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை இணைக்க உதவும். மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் வேலைவாய்ப்பையும் இத்திட்டங்கள் கொண்டுவரும் எனக் குறிப்பிட்டார் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments