கோப்புப் படம். 
இந்தியா

குஜராத்: சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 3 பேர் பலி

குஜராத்தில் சுரங்கம் தோண்டியபோது மூச்சுத் திணறல்: மூன்று பேர் பலி

DIN

குஜராத்தில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 3 பேர் பலியாகினர்.

குஜராத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்தில் பேட் கிராமத்திற்கு அருகே சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கம் இயங்கி வருகிறது. இந்த சுரங்கத்தில் தோண்டிக் கொண்டிருந்தபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு நேற்று மூன்று தொழிலாளர்கள் பலியானதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

பலியான தொழிலாளர்களின் உடல்கள் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுதொடர்பாக 4 பேர் மீது முலி முலி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில், சுரங்கம் தோண்டுவதற்கு ஹெல்மெட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை.

எனவே, அவர்கள் 3 பேரும் நச்சு வாயுவை சுவாசித்ததால் பலியாகினர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த பிப்ரவரியில், இதே மாவட்டத்தில் சட்டவிரோத சுரங்க நடவடிக்கையின்போது நச்சு வாயுவை சுவாசித்த மூன்று தொழிலாளர்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனடா: நடிகர் கபில் சர்மாவின் உணவகத்தின் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு!

பிஎஸ்என்எல் தீபாவளிப் பரிசு! ஒரு ரூபாய்க்கு சிம் - தினசரி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள்

மீண்டும் பாரிஸுக்குப் போகலாம்... அனன்யா பாண்டே!

வங்கதேசத்தை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி; முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற்றம்!

தீபாவளிப் பரிசு... பூஜா ஹெக்டே!

SCROLL FOR NEXT