மேகாலயத்தில் நிலக்கரி சுரங்க வெடி விபத்து: மேலும் இரண்டு உடல்கள் கண்டெடுப்பு, பலி 27ஆக உயர்வு
மேகாலயத்தில் சட்டவிரோத நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் மேலும் இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
மேகாலயத்தில் சட்டவிரோத நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் மேலும் இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
மேகாலய மாநிலம், ஜெயின்தியா ஹில்ஸ் மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த நிலக்கரி சுரங்கத்தில் வியாழக்கிழமை டைனமைட் திடீரென வெடித்தது. இந்த சம்பவத்தில் 18 பேர் பலியாகினர்.
மேலும ஒருவர் காயமடைந்தார். நிலக்கரி பிரித்தெடுப்பதற்காக பாறைகளை உடைக்க இந்த டைனமைட் பயன்படுத்தப்படுகிறது. சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக உரிமையாளர்கள் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில் சட்டவிரோத நிலக்கரி சுரங்க விபத்து நடந்த இடத்திலிருந்து சனிக்கிழமை மேலும் இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் சுரங்க விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.
பலர் இன்னும் காணவில்லை, மேலும் தேடுதல் நடவடிக்கை தொடரும் என்று அவர்கள் தெரிவித்தனர். இதனிடையே பலியானவர்களின் அடையாளம் காணும் பணியும் நடந்து வருவதாக காவல்துறை கண்காணிப்பாளர் விகாஷ் குமார் தெரிவித்தார்.
இதனிடையே சுரங்க விபத்து தொடர்பாக கிளிஹ்ரியத் காவல் நிலையம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.