நாடாளுமன்றம் 
இந்தியா

ஜூலை 21-ல் அனைத்துக் கட்சி கூட்டம்!

ஜூலை 21ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அழைப்பு

DIN

ஜூலை 21ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அழைப்பு விடுத்துள்ளார். இதில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து விவாதிக்க, முன்னதாகவே அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஜூலை 21 காலை 11 மணியளவில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என கிரண் ரிஜிஜூ குறிப்பிட்டுள்ளார்.

2024 - 2025 நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை ஜூலை 23-ம் தேதி மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

நரேந்திர மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த பிறகு, தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளத்தின் இடைக்கால அரசை வழிநடத்தும் தலைவராகிறார் முதல் பெண் தலைமை நீதிபதி !

சத்தீஸ்கர்: ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் சுட்டுக்கொலை!

ரவி மோகன் - யோகிபாபு புதிய படம்: வெளியானது முன்னோட்டக் காட்சி!

கிஷன் தாஸ் - ஹர்ஷத் கானின் ஆரோமலே: அறிமுக விடியோ அப்டேட்!

பிகாரில் மோகாமா-முங்கர் 4 வழிச்சாலைக்கு மத்திய அரசு ஒப்புதல்!

SCROLL FOR NEXT