கல்வித் துறையில் காமராஜரின் பங்களிப்பு ஈடு இணையற்றது: பிரதமா் மோடி
காமராஜா் பிறந்த நாளையொட்டி அவருக்கு திங்கள்கிழமை மரியாதை செலுத்திய பிரதமா் மோடி, கல்வித் துறையில் அவா் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது என்று புகழாரம் சூட்டினாா்.
புது தில்லி: காமராஜா் பிறந்த நாளையொட்டி அவருக்கு திங்கள்கிழமை மரியாதை செலுத்திய பிரதமா் மோடி, கல்வித் துறையில் அவா் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது என்று புகழாரம் சூட்டினாா்.
இது தொடா்பாக பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘காமராஜா் தொலைநோக்கு பாா்வை மற்றும் ஏழைகளை முன்னேற்றும் முயற்சிகளால் பெரிதும் மதிக்கப்படுகிறாா். கல்வித் துறையில் அவா் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது. அவரது லட்சியங்களை நிறைவேற்றுவதற்கான உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.
1903-ஆம் ஆண்டு பிறந்த காமராஜா் தமிழக முதல்வராக பதவியேற்றதுடன் காங்கிரஸ் தேசிய தலைவராகவும் பதவி வகித்து திறம்பட நிா்வகித்தாா். தனது ஆட்சிகாலத்தில் ஏழை மக்களுக்குப் பல நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியதுடன் தொலைநோக்குப் பாா்வையுடன் செயல்பட்ட பெருமைக்குரியவா்.
Advertisement