முகப்பு
இந்தியா

உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமனம்!

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்தவர் ஆர். மகாதேவன்.

Updated On : 16 ஜூலை, 2024 at 10:40 AM
ஆர். மகாதேவன்
பகிர்:

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன், உச்சநீதிமன்ற நீதிபதியாக செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள இரண்டு நீதிபதிகள் இடங்களுக்கு ஆர்.மகாதேவன் உள்ளிட்ட பெயர்களை கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கலந்து ஆலோசித்த பிறகு உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆர்.மகாதேவனை நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜம்மு - காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கோடீஸ்வர் சிங்கும் உச்சநிதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →