FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆர்.மகாதேவன் பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்தவர் ஆர்.மகாதேவன்.

18 July 2024, 11:24 am IST
ஆர்.மகாதேவன் பதவியேற்பு - DOTCOM
பகிர்:

உச்சநீதிமன்ற நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த ஆர்.மகாதேவன் வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன், என்.கோடீஸ்வர் சிங்கும் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்.

உச்சநீதிமன்றத்தில் காலியாக இருந்த இரண்டு நீதிபதிகள் பதவிகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த ஆர்.மகாதேவன் மற்றும் ஜம்மு - காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி என். கோடீஸ்வர் சிங் ஆகியோர் பெயரை கொலீஜியம் பரிந்துரைத்திருந்தது.

Advertisement

Advertisement

கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, இரு நீதிபதிகளும் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

மேலும், சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments