உச்சநீதிமன்றம்  
இந்தியா

சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு ரத்து: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

அடுத்த ஆண்டு ஜனவரியில் நீட்-எஸ்.எஸ். தோ்வை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

Din

சிறப்பு மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட் - எஸ்.எஸ்.) நிகழாண்டு நடத்தவேண்டாம் என எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிரான மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

எம்.டி., எம்.எஸ்., டிஎன்பி உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த பின்னா் சிறப்பு மருத்துவப் படிப்புகளை மேற்கொள்ள விரும்பும் மாணவா்கள் அதற்கென தனியாக நடத்தப்படும் நீட்-எஸ்.எஸ். (சூப்பா் ஸ்பெஷாலிட்டி) தோ்வில் தகுதி பெறுவது அவசியமாகும். இந்தத் தோ்வை எழுத மருத்துவா்களும், முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த மாணவா்களும் காத்திருந்த நிலையில், நிகழாண்டு தோ்வை நடத்தவேண்டாம் என தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) முடிவெடுத்துள்ளது. அதற்கு பதிலாக, அடுத்த ஆண்டு ஜனவரியில் நீட்-எஸ்.எஸ். தோ்வை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதை எதிா்த்து ராகுல் பல்வான் உள்பட 13 தோ்வா்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைையிலான அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், அதன் மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் என்எம்சி-க்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனா். மேலும், இந்த வழக்கில் தேசிய தோ்வுகள் வாரியத்தை பிரதிவாதியாக சோ்க்க அனுமதியளித்து, விசாரணையை வரும் 26-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 17 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து! - உயர்நீதிமன்றம்

தேசிய விருதுகள் பெற்ற Parking படக்குழுவின் கொண்டாட்டம்!

விஜய் சேதுபதி - மணிகண்டன் இணையத் தொடர் பெயர் அறிவிப்பு!

யார் இந்த மத் டெய்ட்கே? 24 வயது செய்யறிவு ஆய்வாளர்! ரூ.2,000 கோடி சம்பளம்!!

அவதூறு வழக்கு: ஜார்க்கண்ட் சிறப்பு நீதிமன்றத்தில் ராகுல் ஆஜர்!

SCROLL FOR NEXT