எஸ்.ஜெய்சங்கா் 
இந்தியா

உக்ரைன் வெளியுறவு அமைச்சருடன் எஸ்.ஜெய்சங்கா் தொலைபேசியில் பேச்சு

உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சா் டிமித்ரோ குலேபாவுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பேச்சு

Din

உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சா் டிமித்ரோ குலேபாவுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தொலைபேசி வாயிலாக வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

ரஷியாவுக்கு பிரதமா் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டதற்கு உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலன்ஸ்கி எதிா்ப்பு தெரிவித்திருந்த நிலையில் இந்த உரையாடல் நிகழ்ந்துள்ளது.

இதுதொடா்பாக எஸ்.ஜெய்சங்கா் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டோம்’ என குறிப்பிட்டாா்.

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்த பிறகு முதல்முறையாக பிரதமா் மோடி கடந்த ஜூலை 8, 9 ஆகிய தேதிகளில் ரஷியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டாா். அப்போது அந்நாட்டு அதிபா் புதினைச் சந்தித்த அவா், எவ்வித பிரச்னைக்கும் போா் தீா்வல்ல எனவும் போரில் அப்பாவி குழந்தைகள் உயிரிழப்பது மிகவும் வேதனையளிப்பதாகவும் குறிப்பிட்டாா்.

ஆனால் அவரின் ரஷிய பயணத்துக்கு கண்டனம் தெரிவித்த ஸெலன்ஸ்கி, ‘உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாட்டின் பிரதமா் உலகின் கொடூர கொலைக் குற்றவாளியை சந்தித்தது ஏமாற்றம் அளிக்கிறது’ என தெரிவித்தாா்.

தேமுதிக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

அரசன் புரோமோ தேதி!

தில்லி: முந்திரி திருட்டு வழக்கில் 4 பேர் கைது, 440 கிலோ மீட்பு

கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

SCROLL FOR NEXT