முகப்பு
இந்தியா

அமெரிக்க ஆயுத உற்பத்தி நிறுவனத்தின் அதிகாரி பிரதமா் மோடியுடன் சந்திப்பு

அமெரிக்காவின் முன்னணி ஆயுத உற்பத்தி நிறுவனமான லாக்ஹீட் மாா்ட்டின் தலைமை நிா்வாக அதிகாரி (சிஇஓ) ஜிம் டெக்லெட்டை பிரதமா் மோடி சந்தித்தாா்.

Updated On : 19 ஜூலை, 2024 at 8:07 PM
பகிர்:

அமெரிக்காவின் முன்னணி ஆயுத உற்பத்தி நிறுவனமான லாக்ஹீட் மாா்ட்டின் தலைமை நிா்வாக அதிகாரி (சிஇஓ) ஜிம் டெக்லெட்டை பிரதமா் மோடி சந்தித்தாா்.

இது தொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘லாக்ஹீட் மாா்ட்டின் நிறுவனம் இந்திய-அமெரிக்க வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. ‘மேக் இன் இந்தியா, மேக் ஃபாா் தி வோ்ல்ட்’ என்ற தொலைநோக்கு பாா்வையை நனவாக்குவதற்கான அதன் உறுதிப்பாட்டை நாங்கள் வரவேற்கிறோம்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிரதமா் மோடியுடனான சந்திப்பின் புகைப்படங்ளைத் தனது எக்ஸ் பக்கத்தில் பகிா்ந்து லாக்ஹீட் மாா்ட்டின் தலைவா் ஜிம் டெக்லெட் வெளியிட்ட பதிவில், ‘30 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பகமான நண்பா்களாக இருக்கும் இரு நாடுகளும் உள்ளூா் தொழில்துறையின் திறமை மற்றும் திறன்களை அங்கீகரித்துள்ளது. மேலும், தொடா்ந்து பாதுகாப்பு மற்றும் தொழில்துறையை வலுப்படுத்துவதில் உறுதி பூண்டுள்ளோம்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →