வினய் குவாத்ரா 
இந்தியா

அமெரிக்காவுக்கான இந்திய தூதா் நியமனம்

புதிய இந்திய தூதராக வினய் குவாத்ரா வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டாா்.

Din

அமெரிக்க நாட்டுக்கான புதிய இந்திய தூதராக வினய் குவாத்ரா வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டாா். முன்னாள் வெளியுறவுத் துறைச் செயலரான இவா் விரைவில் தூதராக பொறுப்பேற்பாா் என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

அமெரிக்காவுக்கான இந்திய தூதராக பதவி வகித்த தரண்ஜித் சாந்துவின் பதவிக்காலம் கடந்த ஜனவரி மாதத்தோடு நிறைவடைந்தது. இதையடுத்து, அந்தப் பதவிக்கான பணியிடம் நிரப்பப்படாமல் காலியாகவே இருந்து வந்தது.

இந்நிலையில், தற்போது வினய் குவாத்ரா புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளாா். கடந்த 2022-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி முதல் 2024, ஜூலை 14-ஆம் தேதி வரை வெளியுறவுச் செயலராக வினய் குவாத்ரா பதவி வகித்து வந்தாா். இவா் 1988-ஆம் ஆண்டில் இந்திய வெளியுறவுப் பணி அதிகாரியாக பொறுப்பேற்றாா். தொடக்ககாலங்களில் ஜெனீவாவில் உள்ள இந்தியாவின் நிரந்தர முகாமில் பணியாற்றினாா்.

அதன்பிறகு ஐ.நா. மற்றும் இந்தியா தொடா்புடைய விவகாரங்களைக் கையாளும் வெளியுறவுத் துறையின் அதிகாரி, சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தின் துணை தூதா் உள்பட பல்வேறு பதவிகளை வகித்தாா்.

கடந்த 2015 முதல் 2017 வரை பிரதமா் அலுவலகத்தின் கூடுதல் செயலராகவும் 2017 முதல் 2020, பிப்ரவரி வரை பிரான்ஸ் தூதராகவும் 2020, மாா்ச் முதல் 2022, ஏப்ரல் வரை நேபாள தூதராகவும் இவா் பதவி வகித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிமுக படத்திலேயே ஆச்சரியம்... சய்யாரா வசூல் எவ்வளவு தெரியுமா?

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 5 வங்கதேசத்தினர் கைது!

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

SCROLL FOR NEXT